குறள் 1103

புணர்ச்சிமகிழ்தல்

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு

thaamveelvaar maennol thuyilin inithukol
thaamaraik kannaan ulaku


Shuddhananda Bharati

Embrace bliss

Is lotus-eyed lord's heaven so sweet
As sleep in lover's arms so soft?


GU Pope

Rejoicing in the Embrace

Than rest in her soft arms to whom the soul is giv'n,
Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven?

Can the lotus-eyed Vishnu's heaven be indeed as sweet to those who delight to sleep in the delicatearms of their beloved ?


Mu. Varadarajan

தாமரைக்‌ கண்ணனுடைய உலகம்‌, தாம்‌ விரும்பும்‌ காதலியரின்‌ மெல்லிய தோள்களில்‌ துயிலும்‌ துயில்போல்‌ இனிமை உடையதோ?


Parimelalagar

'நிரதிசய இன்பத்திற்குரிய நீ இச்சிற்றின்பத்திற்கு இன்னையாதல் தகாது' என்ற பாங்கற்குத் தலைவன் சொல்லியது தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல் - ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல வருந்தாமல் எய்தலாமோ; தாமரைக் கண்ணான் உலகு - அவற்றைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மால் உலகம்.
விளக்கம்:
(ஐம்புலன்களையும் நுகர்வார் என்னும் பெயர் அவாய் நிலையான் வந்தது. 'இப் பெற்றித்தாய துயிலை விட்டுத் தவயோகங்களான் வருந்த வேண்டுதலின், எம்மனோர்க்கு ஆகாது' என்னும் கருத்தால், 'இனிது கொல்' என்றான். இந்திரன் உலகு என்று உரைப்பாரும் உளர். தாமரைக்கண்ணான் என்பது அவனுக்குப் பெயரன்மையின், அஃது உரையன்மையறிக.)


Manakkudavar

(இதன் பொருள்) தம்மால் விரும்பப்படுவாராது மெல்லிய தோளின்கண் துயிலுந் துயிலினும் இனிதோ ? இந்திரனது சுவர்க்கம்,
(என்றவாறு). இது சுவர்க்கத்தின் பமும் இதுதானே யென்று கூறியது.