குறள் 108

செய்ந்நன்றி அறிதல்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

nanri marappathu nanranru nanrallathu
anrae marappathu nanru


Shuddhananda Bharati

Gratitude

To forget good turns is not good
Good it is over wrong not to brood.


GU Pope

The Knowledge of Benefits Conferred - Gratitude

'Tis never good to let the thought of good things done thee pass away;
Of things not good, 'tis good to rid thy memory that very day.

It is not good to forget a benefit; it is good to forget an injury even in the very moment (in which it is inflicted).


Mu. Varadarajan

ஒருவர்‌ முன்செய்த நன்மையை மறப்பது அறம்‌ அன்று; அவர்‌ செய்த தீமையைச்‌ செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம்‌ ஆகும்‌.


Parimelalagar

நன்றி மறப்பது நன்று அன்று-ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறன் அன்று: நன்று அல்லது அன்றே மறப்பது நன்று-அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன்.நல்லோர்.
விளக்கம்:
(இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்ட வழி, மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறர் செய்த நன்றியை மறப்பது என்றும் நன்றல்ல; பிறர் செய்த தீமையை அன்றே மறப்பதன்றே நன்றாம்,
(என்றவாறு). இது தீமையை மறக்க வேண்டு மென்று கூறிற்று.