குறள் 1076

கயமை

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்

araiparai annar kayavarthaam kaetda
maraipirarkku uiththuraikka laan


Shuddhananda Bharati

Meanness

The base are like the beaten drum
Since other's secrets they proclaim.


GU Pope

Baseness

The base are like the beaten drum; for, when they hear
The sound the secret out in every neighbour's ear.

The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard.


Mu. Varadarajan

கயவர்‌, தாம்‌ கேட்டறிந்த மறைபொருளைப்‌ பிறர்க்கு வலியக்கொண்டுபோய்ச்‌ சொல்லுவதால்‌, அறையப்படும்‌ பறை போன்றவர்‌.


Parimelalagar

தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் - தாம் கேட்டமறைகளை இடந்தோறும் தாங்கிக் கொண்டு சென்று பிறர்க்குச் சொல்லுதலான்; கயவர் அறை பறை அன்னர் - கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர்.
விளக்கம்:
(மறை: வெளிப்படின் குற்றம் விளையும் என்று பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல். பிறர், அம்மறைத்தற்குரியார். 'உய்த்து' என்றார், அவர்க்கு அது பெரும்பாரமாதல் நோக்கி. பறை ஒருவன் கையால் தன்னை அறிவித்ததொன்றனை இடந்தோறும் கொண்டு சென்று யாவரையும் அறிவிக்குமாகலான், இது தொழில் உவமம். இதனான் அவரது செறிவின்மை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கயவர் அறையும் பறைபோல்வர்; தாங்கேட்ட மறைகளைப் பிறர்க்குக் கொண்டு சென்று அறிவித்தலான்,
(என்றவாறு). இஃது அடக்கமில் ரென்றது.