Kural 1075
குறள் 1075
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது
achchamae keelkalathu aasaaram yechcham
yechcham avaavuntael untaachiirithu
Shuddhananda Bharati
Fear forms the conduct of the low
Craving avails a bit below.
GU Pope
Fear is the base man's virtue; if that fail,
Intense desire some little may avail.
(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent.
Mu. Varadarajan
கீழ்மக்களின் ஆசாரத்திற்குக் காரணமாக இருப்பது அச்சமே; எஞ்சியவற்றில், அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.
Parimelalagar
கீழ்களது ஆசாரம் அச்சமே - கயவரதாய ஆசாரம் கண்டது உண்டாயின், அதற்குக் காரணம் அரசனான் ஏதம் வரும் என்று அஞ்சும் அச்சமே; எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம் - அஃதொழிந்தால், தம்மால் அவாவப்படும் பொருள் அதனால் உண்டாமாயின் சிறிது உண்டாம்.
விளக்கம்:
(ஆசாரத்தின் காரணத்தை 'ஆசாரம்' என்றும், அவாவப் படுவதனை 'அவா' என்றும் கூறினார். 'எச்சத்தின்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை பொருட்பேறு, இவ்விரண்டானும் அன்றி இயல்பாக உண்டாகாது என்பதாம். வேண்டிய செய்தலே இயல்பு; ஆசாரம் செய்தல் இயல்பன்று என்பது இதனான் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) கயவர் ஆசாரமுடைய ராதற்குக் காரணம் அச்சமே; அஃ தொழிய, ஒரு பொருள் மேல் ஆசையுடையராயின், அது காரணமாகவும் சிறிது ஒழுக்கம் உண்டாம்,
(என்றவாறு) இஃது இயல்பான ஒழுக்கம் இலரென்றது.