குறள் 1073

கயமை

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்

thaevar anaiyar kayavar avarundhthaam
maevana seitholuka laan


Shuddhananda Bharati

Meanness

The base are like gods; for they too
As prompted by their desire do.


GU Pope

Baseness

The base are as the Gods; they too
Do ever what they list to do!

The base resemble the Gods; for the base act as they like.


Mu. Varadarajan

கயவரும்‌ தேவரைப்‌ போல்‌ தாம்‌ விரும்புகின்றவைகளைச்‌ செய்து மனம்‌ போன போக்கில்‌ நடத்தலால்‌, கயவர்‌ தேவரைப்‌ போன்றவர்‌.


Parimelalagar

தேவர் அனையர் கயவர் - தேவரும் கயவரும் ஒரு தன்மையர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அஃது யாதினான் எனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான்.
விளக்கம்:
(உணர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு குறிப்பால் தோன்ற நின்றமையின், இது புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று. இதனான், விலக்கற்பாடின்றி வேண்டிய செய்வர் என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கயவர் தேவரை யொப்பவர்; அத்தேவரும் இக்கயவரைப்போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவாராதலான்,
(என்றவாறு). இது கயவர் வேண்டியன செய்வாரென்றது.