Kural 1071
குறள் 1071
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்
makkalae polvar kayavar avaranna
oppaari yaangkanda thil
Shuddhananda Bharati
The mean seem men only in form
We have never seen such a sham.
GU Pope
The base resemble men in outward form, I ween;
But counterpart exact to them I've never seen.
The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance(among any other species).
Mu. Varadarajan
மக்களே போல் இருப்பர் கயவர்; அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.
Parimelalagar
மக்களே போல்வர் கயவர் - வடிவான் முழுதும் மக்களை ஒப்பர் கயவர்; அவர் அன்ன ஒப்பார் யாம் கண்டது இல் - அவர் மக்களை யொத்தாற்போன்ற ஒப்பு வேறு இரண்டு சாதிக்கண் யாம் கண்டதில்லை.
விளக்கம்:
(முழுதும் ஒத்தல் தேற்றே காரத்தால் பெற்றாம். 'அவர்' என்றது அவர் மாட்டுளதாய ஒப்புமையை. மக்கட் சாதிக்கும் கயச்சாதிக்கும் வடிவு ஒத்தலின், குணங்களது உண்மை இன்மைகளானல்லது வேற்றுமை அறியப்படாது என்பதாம். இதனான் கயவரது குற்றமிகுதி கூறப்பட்டது.)
Manakkudavar
கயமையாவது இழிகுணத்தாராகிய மாந்தரியல்பு கூறுதல். இவர் மேற் கூறப்பட்ட எல்லாரினும் இழிந்தாராதலின், இது பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) மக்களை யொப்பவர் கயவர், அம்மக்களை யொக்குமாறு போல் ஒப் பது ஒன்றனோடு மற்றொன்று உவமை கூறப்படுமவற்றில் யாங்கண்டறிவது இல்லை ,
(என்றவாறு). உறுப்பொத்துக் குணமொவ்வாமையால், கயவர் மக்களல்லராயினார்.