குறள் 1068

இரவச்சம்

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்

iravaennum yaemaappil thoni karavaennum
paarthaakkap pakku vidum


Shuddhananda Bharati

Dread of beggary

The hapless bark of beggary splits
On the rock of refusing hits.


GU Pope

The Dread of Mendicancy

The fragile bark of beggary
Wrecked on denial's rock will lie.

The unsafe raft of begging will split when it strikes on the rock of refusal.


Mu. Varadarajan

இரத்தல்‌ என்னும்‌ காவல்‌ இல்லாத மரக்கலம்‌ உள்ளதை ஒளித்துவைக்கும்‌ தன்மையாகிய வன்னிலம்‌ தாக்கினால்‌ உடைந்துவிடும்‌.


Parimelalagar

இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி -'இவ்வறுமை என்னும் கடலை இதனால் கடத்தும்,' என்று கருதி ஒருவன் ஏறிய இரவு என்னும் சேமமற்ற தோணி; கரவு என்னும் பார் தாக்கப்பக்குவிடும் - அதன்கண் ஓடுங்கால் கரத்தல் என்னும் வன்னிலத்தோடு தாக்குமாயின் பிளந்துபோம்.
விளக்கம்:
(முயற்சியால் கடப்பதனை இரவால் கடக்கலுற்றான் அதன் கரை காணாமையின், 'ஏமாப்பு இல் தோணி' என்றார். ஏமாப்பு இன்மை தோணி மேல் ஏற்றப்பட்டது. அது கடத்தற்கு ஏற்றது அன்மையானும் நிலம் அறியாது செலுத்தியவழி உடைதலானும், அதற்கண் ஏறற்க என்பதாம். இஃது அவயவ உருவகம்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவன் வறுமையாகிய கடலை நீந்திக் கடக்க அமைத்துக் கொண்ட இரத்தலாகிய அரணில்லாத தோணி, இரக்கப்பட்டார்மாட்டுக் காத்த லாகிய கல்லோடே தாக்க இறந்துவிடும்,
(என்றவாறு). இஃது நல்குரவு தீராமைக்குக் காரணங் கூறிற்று.