குறள் 1067

இரவச்சம்

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று

irappan irappaarai yellaam irappin
karappaar iravanmin yenru


Shuddhananda Bharati

Dread of beggary

If beg they must I beg beggers
Not to beg from shrinking misers.


GU Pope

The Dread of Mendicancy

One thing I beg of beggars all, 'If beg ye may,
Of those who hide their wealth, beg not, I pray.’

I beseech all beggars and say, "If you need to beg, never beg of those who give unwillingly."


Mu. Varadarajan

இரந்து கேட்பதானால்‌ உள்ளதை ஒளிப்பவரிடத்தில்‌ சென்று இரக்கவேண்டாம்‌ என்று இரப்பவர்‌ எல்லோரையும்‌ இரந்து வேண்டுகின்றேன்‌.


Parimelalagar

இரப்பாரை எல்லாம் இரப்பன் - இரப்பாரையெல்லாம் யான் இரவாநின்றேன்; இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று - 'யாது சொல்லி?' எனின், நுமக்கு இரக்க வேண்டுமாயின் தமக்குள்ளது கரப்பாரை இரவாதொழிமின் என்று சொல்லி,
விளக்கம்:
(இரண்டாவது விகாரத்தால் தொக்கது. இவ்விளிவந்த செயலான் ஊட்டிய வழியும் உடம்பு நில்லாதாகலின், இது வேண்டா என்பது தோன்ற, 'இரப்பன்' என்றார். இதனான் மானம் தீர வரும் இரவு விலக்கப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறர்மாட்டு இரந்து செல்வா ரெல்லாரையும் யானிரந்து கொள்ளா நின்றேன்; இரக்குமிடத்து, இல்லை யென்பவர்மாட்டு ஒரு பொருளை இரந்து சொல்லன்மின் என்று சொல்லி,
(என்றவாறு). இரந்து சொல்லாமை இரந்து பெற்ற பொருளினும் கோடி மடங்கு மிகுதி யுடைத்தென்றவாறு. இஃது ஈவார்மாட்டும் இரத்தலாகா தென்றது.