குறள் 1065

இரவச்சம்

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்

thaenneer aduputrkai aayinum thaalthandhthathu
unnalin oongkiniya thil


Shuddhananda Bharati

Dread of beggary

Though gruel thin, nothing is sweet
Like the food earned by labour's sweat.


GU Pope

The Dread of Mendicancy

Nothing is sweeter than to taste the toil-won cheer,
Though mess of pottage as tasteless as the water clear.

Even thin gruel is ambrosia to him who has obtained it by labour.


Mu. Varadarajan

தெளிந்த நீர்போல்‌ சமைத்த கூழே ஆனாலும்‌, முயற்சியால்‌ கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும்‌ இல்லை.


Parimelalagar

தாள் தந்தது தெண்ணீர் அடுபுற்கையாயினும் - நெறியாய முயற்சி கொடுவந்து தந்தது தெளிந்த நீர் போலும் அடுபுற்கையே யாயினும்; உண்ணலின் ஊங்கு இனியது இல் - அதனையுண்டற்கு மேல் இனியது இல்லை.
விளக்கம்:
(தாள் தந்த கூழ் செறிவின்றித் தெண்ணீர் போன்றதாயினும், இழிவாய இரவான் வந்ததன்றித் தம் உடைமையாகலின், அமிழ்தத்தோடு ஒக்கும் என்பதாம். இதனான் நெறியினானாயது சிறிதேனும், அது செய்யும் இன்பம் பெரிது என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) மோரினும் காடியினும் அடப்பெறாது தெளிந்த நீரினாலே யட்ட புற்கையாயினும், தனது தாளாண்மையால் வந்ததனை உண்ணுதலின் மிக இனிதா யிருப்பது பிறிது இல்லை, (எ - று.)