குறள் 1064

இரவச்சம்

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு

idamaellaam kollaath thakaiththae idamillaak
kaalum iravollaach saalpu


Shuddhananda Bharati

Dread of beggary

All space is small before the great
Who beg not e'en in want acute.


GU Pope

The Dread of Mendicancy

Who ne'er consent to beg in utmost need, their worth
Has excellence of greatness that transcends the earth.

Even the whole world cannot sufficiently praise the dignity that would not beg even in the midst of destitution.


Mu. Varadarajan

வாழ வழி இல்லாத போதும்‌ இரந்துகேட்க உடன்படாத சால்பு, உலகத்தில்‌ இடமெல்லாம்‌ கொள்ளாத அவ்வளவு பெருமையுடையதாகும்‌.


Parimelalagar

இடம் இல்லாக்காலும் இரவு ஒல்லாச் சால்பு - நுகரவேண்டுவன இன்றி நல்கூர்ந்தவழியும் பிறர்பாற்சென்று இரத்தலை உடம்படாத அமைதி; இடமெல்லாம் கொள்ளா தகைத்தே - எல்லாவுலகும் ஒருங்கு இயைந்தாலும் கொள்ளாத பெருமையுடைத்து.
விளக்கம்:
(அவ்விரத்தலைச் சால்பு விலக்குமாகலின், இரவு ஒல்லாமை அதன்மேல் ஏற்றப்பட்டது. இதனான் அந்நெறியல்லதனைச் சால்புடையார் செய்யார் என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தஞ்சுற்றத்தளவு தமக்கு வருவாய் இல்லாக் காலத்தினும், பிறரை இரத்தற்கு இசையாத சால்பு, அகன்ற வுலகமெல்லாம் கொள்ளாத பெரு மையே யுடைத்து,
(என்றவாறு). இஃது இரவாதார் பெரிய ரென்றது.