குறள் 1060

இரவு

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி

irappaan vaekulaamai vaendum nirappidumpai
thaanaeyum saalum kari


Shuddhananda Bharati

Asking

The needy should not scowl at "No"
His need anothers' need must show.
* Saint valluvar talks of two kinds of Asking:-
(1) Asking help for public causes or enterprises.
(2) Begging when one is able to work and this is condemned.


GU Pope

Mendicancy

Askers refused from wrath must stand aloof;
The plague of poverty itself is ample proof.

He who begs ought not to be angry (at a refusal); for even the misery of (his own) poverty should be a sufficient reason (for so doing).


Mu. Varadarajan

இரப்பவன்‌ எவரிடத்திலும்‌ சினம்‌ கொள்ளாதிருக்க வேண்டும்‌; அவன்‌ அடைந்துள்ள வறுமைத்‌ துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும்‌ சான்றாக அமையும்‌.


Parimelalagar

இரப்பான் வெகுளாமை வேண்டும் - ஈவானுக்குப் பொருள் உதவாவழி 'இவன் எனக்கு ஈகின்றிலன்' என்று அவனை இரப்பான் வெகுளாதொழிதல் வேண்டும்; நிரப்பு இடும்பை தானேயும் கரிசாலும் - அது வேண்டிய பொழுது உதவாது என்பதற்கு வேறு சான்று வேண்டா, நிரப்பாகிய தன் இடும்பை தானேயும் சான்றாதல் அமையும்.
விளக்கம்:
(யாவர்க்கும் தேட வேண்டுதலும் நிலையின்மையும் முதலிய பிற சான்றும் உண்டு என்பதுபட நின்றமையின், உம்மை எச்ச உம்மை. தனக்கேயன்றி மற்றை யிரந்தார்க்கும் அற்றைக்கன்று பொருள் கடைக்கூட்டற்கு அவனுறும் துன்பத்தைத் தனக்கேயாக வைத்துத் தானுறுந் துன்பம் தான் அறிந்து வெகுளற்க என்பதாம். இதனான் அவர்க்கு இன்றியமையாததோர் இயல்பு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவனை யிரந்தான் அவன் ஈந்தில னென்று தான் வெகுளா தொழிதல் வேண்டும்; பொருளரிதென்பதற்குத் தன்னுடைய நிரப்பிடும்பை தானேயும் அமையுஞ் சான்று,
(என்றவாறு). இஃது இரப்பார்க்கு வேண்டியதோ ரியல்பு கூறிற்று.