குறள் 1059

இரவு

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை

eevaarkan yennuntaam thotrram irandhthukoal
maevaar ilaaak katai


Shuddhananda Bharati

Asking

Where stands the glory of givers
Without obligation seekers?


GU Pope

Mendicancy

What glory will there be to men of generous soul,
When none are found to love the askers' role?

What (praise) would there be to givers (of alms) if there were no beggars to ask for and reveive(them).


Mu. Varadarajan

பொருள்‌ இல்லை என்று இரந்து அதைப்‌ பெற்றுக்‌ கொள்ள விரும்புவோர்‌ இல்லாதபோது, பொருள்‌ கொடுப்பவரிடத்தில்‌ என்ன புகழ்‌ உண்டாகும்‌?


Parimelalagar

இரந்துகோள் மேவார் இலாஅக் கடை - அவர்பாற்சென்று ஒன்றனை இரந்து கோடலை விரும்புவார் இல்வழி; ஈவார்கண் தோற்றம் என் உண்டாம் - கொடுப்பார்மாட்டு என்ன புகழுண்டாம்? யாதுமில்லை.
விளக்கம்:
(தோற்றம் - ஆகுபெயர். 'மேவுவார்' என்பது விகாரமாயிற்று. கொடுத்தல் வண்மை வெளிப்படாமையின், அதனால் புகழெய்தார் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் உலகிற்கு இரப்பார் வேண்டும் என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகம் இரக்குமவர்களை உடைத்தல்லவாயின், உள்ள மக்களது இயக்கம் மரப்பாவை சென்று வந்து இயங் கினாற்போலும்,
(என்றவாறு). இஃது இரத்தலும் ஈதலும் உலகியல்பாதலான், இரத்தல் இழிவென்று கொள்ளப்படா தென்றது.