Kural 1058
குறள் 1058
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று
irappaarai illaayin eerngkanmaa gnyaalam
marappaavai senruvandh thatrru
Shuddhananda Bharati
This grand cool world shall move to and fro
Sans Askers like a puppet show.
GU Pope
If askers cease, the mighty earth, where cooling fountains flow,
Will be a stage where wooden puppets come and go.
If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet.
Mu. Varadarajan
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
Parimelalagar
இரப்பார் இல்லாயின் - வறுமையுற்று இரப்பார் இல்லையாயின்; ஈர்ங்கண்மா ஞாலம் - குளிர்ந்த இடத்தையுடைய பெரிய ஞாலத்துள்ளார் செலவு வரவுகள்; மரப்பாவை சென்று வந்தற்று - உயிரில்லாத மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்று வந்தாற்போலும்.
விளக்கம்:
(ஐகாரம், அசைநிலை ஞாலம் என்னும் ஆகுபெயர்ப் பொருட்கு உவமையோடு ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. ஞாலத்துள்ளார் என்றது அவரை ஒழிந்தாரை. அவர்க்கு ஈதலைச் செய்து புகழும் புண்ணியமும் எய்தாமையின், உயிருடையரல்லார் என்பதாம், ''ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து வாழ்வாரே வன் கணவர்,'' என்றார் பிறரும்: இத்தொடையின்பம் நோக்காது 'இரப்பவர் இல்லாயின்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)
Manakkudavar
(இதன் பொருள்) இரந்து கோடலைப் பொருந்துவார் இல்லாதவிடத்து ஈயக் கருதி யிருப்பார் மாட்டுப் புகழ் யாதான் உண்டாம்,
(என்றவாறு). இஃது இரப்பாரில்லாராயின், புகழுடையார் இலராவர்; ஆதலால், இரவு பழிக்கப்படா தென்றது.