குறள் 1056

இரவு

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்

karappidumpai yillaaraik kaanin nirappidumpai
yellaam orungku kedum


Shuddhananda Bharati

Asking

The pain of poverty shall die
Before the free who don't deny.


GU Pope

Mendicancy

It those you find from evil of 'denial' free,
At once all plague of poverty will flee.

All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.


Mu. Varadarajan

உள்ளதை ஒளிக்கும்‌ துன்ப நிலை இல்லாதவரைக்‌ கண்டால்‌, இரப்பவரின்‌ வறுமைத்துன்பம்‌ எல்லாம்‌ ஒருசேரக்‌ கெடும்‌.


Parimelalagar

கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் - உள்ளது கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் - மானம் விடாது இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக் கெடும்.
விளக்கம்:
(கரத்தல், ஒருவற்கு வேண்டுவதொன்றன்மையின், அதனை 'நோய்' என்றும், அஃது இல்லாத இரக்கத்தக்காரைக் கண்டபொழுதே அவர் கழியுவகையராவர் ஆகலின், 'எல்லாம் ஒருங்கு கெடும்' என்றும் கூறினார். இடும்பை - ஆகுபெயர். 'முழுதும் கெடும்' என்று பாடம் ஓதி, 'எஞ்சாமற் கெடும்' என்று உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) கரப்பிடும்பை இல்லாதாரைக் காண்பாராயின், நிரப்பினான் ஆகிய இடும்பை யெல்லாம் ஒருங்கு கெடும்,
(என்றவாறு). கரப்பிடும்பை யில்லார் என்றமையால், இது செல்வராயினார் மாட்டு இரக்க லாகா தென்றது.