Kural 1055
குறள் 1055
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது
karappilaar vaiyakaththu unmaiyaal kanninru
irappavar maetrkol vathu
Shuddhananda Bharati
The needy demand for help because
The world has men who don't refuse.
GU Pope
Because on earth the men exist, who never say them nay,
Men bear to stand before their eyes for help to pray.
As there are in the world those that give without refusing, there are (also) those that prefer to beg by simply standing before them.
Mu. Varadarajan
ஒருவர்முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று, ஒளித்துக் கூறாத நன்மக்கள் உலகத்தில் இருப்பதால்தான்.
Parimelalagar
கண்ணின்று இரப்பவர் மேற்கொள்வது - சொல்லுதன் மாட்டாது முன் நிற்றல் மாத்திரத்தான் இரப்பார் உயிரோம் பற்பொருட்டு அதனை மேற்கொண்டு போதுகின்றது; கரப்பு இலார் வையகத்து உண்மையான் - அவர்க்கு உள்ளது கரவாது கொடுப்பார் சிலர் உலகத்து உளராய தன்மையானே; பிறிதொன்றான் அன்று.
விளக்கம்:
(அவர் இல்லையாயின். மானம் நீக்க மாட்டாமையின் உயிர் நீப்பர் என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) ஒருவன் முன்னே நின்று இரத்தலை இரப்பார் மேற்கொள்வது, கரப்பில்லாதார் உலகத்து உண்டாதலானே, மற்றொன்றாலன்று,
(என்றவாறு). மேல் கரவா தார்மாட் டிரக்கவென்றார் உலகத்தில் அவரைப் பெறுத லரி தென்றார்க்கு , இது கூறினார்.