Kural 1054
குறள் 1054
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு
iraththalum eethalae polum karaththal
kanavilum thaetrraathaar maatdu
Shuddhananda Bharati
Like giving even asking seems
From those who hide not even in dreams.
GU Pope
Like giving alms, may even asking pleasant seem,
From men who of denial never even dream.
To beg of such as never think of withholding (their charity) even in their dreams, is in fact the same as giving (it oneself);
Mu. Varadarajan
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவனிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்குக் கொடுப்பதே போன்ற சிறப்புடையது.
Parimelalagar
கரத்தல் கனவிலும் தேற்றாதார்மாட்டு இரத்தலும் - தமக்குள்ளது சுரத்தலைக் கனவின்கண்ணும் அறியாதார்மாட்டுச் சென்று ஒன்றனை இரத்தலும்; ஈதலே போலும் - வறியார்க்கு ஈதலே போலும்.
விளக்கம்:
(உம்மை - ஈண்டும் அவ்வாறு நின்றது. தான் புகழ் பயவாதாயினும் முன்னுளதாய புகழ் கெடவாராமையின் 'ஈதலே போலும்' என்றார். ஏகாரம் - ஈற்றசை.)
Manakkudavar
(இதன் பொருள்) கரத்தலைக் கனவின் கண்ணும் அறியாதார்மாட்டு, இரந்து சேற லும் கொடுப்பதனோடு ஒக்கும்,
(என்றவாறு). ஈதலே போலும் என்பதற்கு 'கரத்தல் கனவிலுந் தேற்றாதார்' என்றமையால் இரப்பான் தாரானென்று கொள்ளப்படு