Kural 1053
குறள் 1053
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து
karappilaa naechin kadanarivaar munninru
irappumo raeyer utaiththu
Shuddhananda Bharati
Request has charm form open hearts
Who know the duty on their part.
GU Pope
The men who nought deny, but know what's due, before their face
To stand as suppliants affords especial grace.
There is even a beauty in standing before and begging of those who are liberal in their gifts and understand their duty (to beggars).
Mu. Varadarajan
ஒளிப்பு இல்லாத நெஞ்சும் கடமையுணர்ச்சியும் உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.
Parimelalagar
கரப்பிலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று இரப்பும் - கரத்தல் இல்லாத நெஞ்சினையுடைய மானம் அறிவார் முன்னர் நின்று அவர் மாட்டு ஒன்று இரத்தலும்; ஓர் ஏஎர் உடைத்து - நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து.
விளக்கம்:
(''சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு'' [குறள். 963] என்றதனால், அவர்க்கு அது கடன் எனப்பட்டது. அதனை அறிதல், சொல்லுதலுற்று உரைக்கலாகாமைக்கு ஏதுவாய் அதன் இயல்பினை அறிதல். அவ்வறிவுடையார்க்கு முன்நிற்றல் மாத்திரமே அமைதலின், 'முன் நின்று' என்றும், சொல்லுதலான் வரும் சிறுமை எய்தாமையின், 'ஓர் ஏஎருடைத்து' என்றும் கூறினார். உம்மை அதன் இழிபு விளக்கி நின்றது.)
Manakkudavar
(இதன் பொருள்) ஒருவன் முன்னே நின்று இரத்தலை இரப்பார் மேற்கொள்வது, கரப்பில்லாதார் உலகத்து உண்டாதலானே, மற்றொன்றாலன்று,
(என்றவாறு). மேல் கரவா தார்மாட் டிரக்கவென்றார் உலகத்தில் அவரைப் பெறுத லரி தென்றார்க்கு , இது கூறினார்.