குறள் 105

செய்ந்நன்றி அறிதல்

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

uthavi varaiththanru uthavi uthavi
seyappattaar saalpin varaiththu


Shuddhananda Bharati

Gratitude

A help is not the help's measure
It is gainer's worth and pleasure.


GU Pope

The Knowledge of Benefits Conferred - Gratitude

The kindly aid's extent is of its worth no measure true;
Its worth is as the worth of him to whom the act you do.

The benefit itself is not the measure of the benefit; the worth of those who have received it is its measure.


Mu. Varadarajan

கைம்மாறாகச்‌ செய்யும்‌ உதவி முன்செய்த உதவியின்‌ அளவை உடையது அன்று; உதவி செய்யப்பட்டவரின்‌ பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்‌.


Parimelalagar

உதவி உதவி வரைத்து அன்று கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து-அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று.
விளக்கம்:
(''சால்பு எவ்வளவு பெரிதாயிற்று, உதவியும் அவ்வளவு பெரிதாம்' என்பார், 'சால்பின் வரைத்து' என்றார். இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும் அறிவார்க்குச் செய்த வழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) முன்னே செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற் று தவி; அவ்வுதவி செய்யப்பட்டவர் தன்மை எவ்வளவிற்று அவ்வளவிற்று அவர் செய்யும் மாற்றுதவி, (எ - று ) இது மாற்று தவிக்கு அளவில்லை என்றது.