குறள் 1049

நல்குரவு

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது

naeruppinul thunjchalum aakum nirappinul
yaathonrum kanpaadu arithu


Shuddhananda Bharati

Poverty

One may sleep in the midst of fire
In want a wink of sleep is rare.


GU Pope

Poverty

Amid the flames sleep may men's eyelids close,
In poverty the eye knows no repose.

One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.


Mu. Varadarajan

ஒருவன்‌ நெருப்பினுள்‌ இருந்து தூங்குதலும்‌ முடியும்‌; ஆனால்‌ வறுமை நிலையில்‌ எவ்வகையாலும்‌ கண்மூடித்‌ தூங்குதல்‌ அரிது.


Parimelalagar

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை.
விளக்கம்:
('நெருப்பினும் நிரப்புக் கொடிது,' என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் ஆகும்; நிரப்பிடும்பை யுள் உறங்குதல் யாதொரு முகத்தினாலும் அரிது,
(என்றவாறு). இஃது உறங்கவொட்டா தென்றது.