குறள் 1048

நல்குரவு

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு

inrum varuvathu kollo naerunalum
konrathu polum nirappu


Shuddhananda Bharati

Poverty

The killing Want of yesterday
Will it pester me even to-day?


GU Pope

Poverty

And will it come today as yesterday,
The grief of want that eats my soul away?

Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?


Mu. Varadarajan

நேற்றும்‌ கொலை செய்ததுபோல்‌ துன்புறுத்திய வறுமை இன்றும்‌ என்னிடம்‌ வருமோ! (என்று வறியவன்‌ நாள்தோறும்‌ கலங்கி வருந்துவான்‌;


Parimelalagar

நெருநலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ; வந்தால் இனி யாது செய்வேன்?
விளக்கம்:
(அவ் வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள். 1045) துன்பங்கள், நெருநல்மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) இன்றும் வரும்போலும்; நெருஞற்றும் என்னைக் கொன்றது போ லுற்ற நிரப்பிடும்பை ,
(என்றவாறு) இது நாடோறும் அச்சு முறுத்து மென்று கூறிற்று.