குறள் 1043

நல்குரவு

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை

tholvaravum tholum kedukkum thokaiyaaka
nalkuravu yennum nasai


Shuddhananda Bharati

Poverty

The craving itch of poverty
Kills graceful words and ancestry.


GU Pope

Poverty

Importunate desire, which poverty men name,
Destroys both old descent and goodly fame.

Hankering poverty destroys at once the greatness of (one's) ancient descent and (the dignity ofone's) speech.


Mu. Varadarajan

வறுமை என்று சொல்லப்படும்‌ ஆசைநிலை ஒருவனைப்‌ பற்றினால்‌ அவனுடைய பழைமையான குடிப்‌ பண்பையும்‌ புகழையும்‌ ஒருசேரக்‌ கெடுக்கும்‌.


Parimelalagar

தல்குரவு என்னும் நசை - நல்குரவு என்று சொல்லப்படும் ஆசை; தொல் வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும் - தன்னால் பற்றப்பட்டாருடைய பழைய குடிவரவினையும் அதற்கு ஏற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும்.
விளக்கம்:
(நசையில் வழி நல்குரவும் இல்லையாகலின், நல்குரவையே நசையாக்கி, அஃது அக்குடியின் தொல்லோர்க்கு இல்லாத இழிதொழில்களையும் இளிவந்த சொற்களையும் உளவாக்கலான், அவ்விரண்டனையும் ஒருங்கு கெடுக்கும் என்றார். ''குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்'' [மணி 11 - 76] என்றார் பிறரும். தோலாவது ''இழுமென் மொழியால் விழுமியது நுவறல்'' [தொல். பொருள். செய்யுள். 239] என்றால் தொல்காப்பியனாரும். இதற்கு 'உடம்பு' என்று உரைப்பாரும் உளர். அஃது அதற்குப் பெயராயினும் 'உடம்பு' கெடுக்கும் என்றற்கு ஓர் பொருட்சிறப்பு இல்லாமை அறிக.)


Manakkudavar

(இதன் பொருள்) தொன்றுதொட்டு வருகின்ற குடிப்பிறப்பினையும் வடிவழகினையும் ஒருங்கு கெடுக்கும்; நல்குரவென்று சொல்லப்படுகின்ற ஆசைப்பாடு,
(என்றவாறு). நல்குரவு ஆசையைப் பண்ணுதலினால், ஆசையாயிற்று. தொல் - ஆகுபெயர். இது குலத்தினையும் அழகினையும் கெடுக்குமென்றது.