குறள் 1044

நல்குரவு

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்

itrpirandhthaar kannaeyum inmai ilivandhtha
sotrpirakkum chorvu tharum


Shuddhananda Bharati

Poverty

Want makes even good familymen
Utter words that are low and mean.


GU Pope

Poverty

From penury will spring, 'mid even those of noble race,
Oblivion that gives birth to words that bring disgrace.

Even in those of high birth, poverty will produce the fault of uttering mean words.


Mu. Varadarajan

வறுமை என்பது, நல்ல குடியிற்‌ பிறந்தவரிடத்திலும்‌ இழிவு தரும்‌ சொல்‌ பிறப்பதற்குக்‌ காரணமான சோர்வை உண்டாக்கிவிடும்‌.


Parimelalagar

இற்பிறந்தார் கண்ணேயும் - இளிவந்த சொற்பிறவாத குடிப்பிறந்தார் மாட்டேயும்; இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு இன்மை தரும் - அது பிறத்தற்கு ஏதுவாகிய சோர்வினை நல்குரவு உண்டாக்கும்.
விளக்கம்:
(சிறப்பு உம்மை அவர்மாட்டு அது பிறவாமை தோன்ற நின்றது. இளிவந்த சொல் - இளி வருதற்கு ஏதுவாகிய சொல். அஃதாவது, 'எமக்கு ஈய வேண்டும்' என்றல். சோர்வு: தாம் உறுகின்ற துன்பம் மிகுதிபற்றி ஒரோவழித் தம் பிறப்பினை மறந்து அது சொல்வதாக நினைத்தல்.)


Manakkudavar

(இதன் பொருள்) நல்குரவு, குடிப்பிறந்தார்மாட்டேயும் இளிவரவான சொற்கள் பிறக்குஞ் சோர்வினை உண்டாக்கும்,
(என்றவாறு).