குறள் 1042

நல்குரவு

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்

inmai yenavoru paavi marumaiyum
immaiyum inri varum


Shuddhananda Bharati

Poverty

The sinner Want is enemy dire
Of joys of earth and heaven there.


GU Pope

Poverty

Malefactor matchless! poverty destroys
This world's and the next world's joys.

When cruel poverty comes on, it deprives one of both the present and future (bliss).


Mu. Varadarajan

வறுமை என்று சொல்லப்படும்‌ பாவி ஒருவனை நெருங்கினால்‌, அவனுக்கு மறுமையின்பமும்‌ இம்மையின்பமும்‌ இல்லாமற்‌ போகும்‌ நிலைமை வரும்‌.


Parimelalagar

இன்மை என ஒருபாவி - வறுமை என்று சொல்லப்படுவதொரு பாவி; மறுமையும் இம்மையும் இன்றி வரும் - ஒருவனுழை வருங்கால் அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லையாக வரும்.
விளக்கம்:
('இன்னாமையென ஒருபாவி' என்பதற்கு மேல் ''அழுக்காறென ஒரு பாவி'' [குறள்.168] என்புழி உரைத்தாங்கு உரைக்க. மறுமை, இம்மை என்பன ஆகுபெயர். ஈயாமையானும் துவ்வாமையானும் அவை இலவாயின. 'இன்றிவிடும்' என்று பாடம் ஓதிப் 'பாவியால்' என விரித்துரைப்பாரும் உளர்.) --


Manakkudavar

(இதன் பொருள்) நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடைய வன், இம்மையின் கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி யின்றி விடும் (0) தன்மம் பண்ணாமையால், மறுமையின் கண்ணும் நுகர்ச்சியில்லாமை யாயிற்று. இது நல்குரவு துன்பமாக்கு மென்றது.