Kural 1041
குறள் 1041
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
inmaiyin innaathathu yaathaenin inmaiyin
inmaiyae innaa thathu
Shuddhananda Bharati
What gives more pain than scarcity?
No pain pinches like poverty.
GU Pope
You ask what sharper pain than poverty is known;
Nothing pains more than poverty, save poverty alone.
There is nothing that afflicts (one) like poverty.
Mu. Varadarajan
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்,
Parimelalagar
இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை.
விளக்கம்:
(இன்னாதது - துன்பஞ் செய்வது. ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று.)
Manakkudavar
நல்குரவாவது பொருளில்லாதார்க்கு உளதாகுங் குற்றங் கூறுதல். இஃது உழவில்லாதார்க்கு உளதாவ தொன்றாதலின், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) நல்குரவுபோல் இன்னாதது யாதெனின், நல்குரவுபோல இன்னா தது தானே, (தானே - நல்குரவே),
(என்றவாறு). இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது