குறள் 1040

உழவு

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்

ilamaenru asaii iruppaaraik kaanin
nilamaennum nallaal nakum


Shuddhananda Bharati

Farming

Fair good earth will laugh to see
Idlers pleading poverty.


GU Pope

Agriculture

The earth, that kindly dame, will laugh to see,
Men seated idle pleading poverty.

The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life.


Mu. Varadarajan

எம்மிடம்‌ ஒரு பொருளும்‌ இல்லை என்று எண்ணி வறுமையால்‌ சோம்பியிருப்பவரைக்‌ கண்டால்‌, நிலமகள்‌ தன்னுள்‌ சிரிப்பாள்‌.


Parimelalagar

இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் - யாம் வறியேம் என்று சொல்லி மடிந்திருப்பாரைக் கண்டால்; நிலம் என்னும் நல்லாள் நகும் - நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள் தன்னுள்ளே நகா நிற்கும்.
விளக்கம்:
(உழுதல் முதலிய செய்வார் யாவர்க்கும் செல்வங் கொடுத்து வருகின்றவாறு பற்றி 'நல்லாள்' என்றும், அது கண்டுவைத்தும் அது செய்யாது வறுமையுறுகின்ற பேதைமை பற்றி, 'நகும்' என்றும் கூறினார். 'இரப்பாரை' என்று பாடம் ஓதுவாரும் உளர். இதனான் அது செய்யாத வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது. வருகின்ற அதிகாரமுறைமைக்குக் காரணமும் இது.)


Manakkudavar

(இதன் பொருள்) பொருளிலோ மென்று சோம்பி இரப்பாரைக் கண்டால், நில மாகிய நல்லாள் இகழ்ந்து நகும், (எ - று ). இது நிலம் மடியில்லாதார்க்கு வேண்டியது கொடுக்கு மென்றது.