குறள் 1036

உழவு

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை

ulavinaar kaimmadangkin illai vilaivathooum
vittaemyen paarkkum nilai


Shuddhananda Bharati

Farming

Should ploughmen sit folding their hands
Desire-free monks too suffer wants.


GU Pope

Agriculture

For those who 've left what all men love no place is found,
When they with folded hands remain who till the ground.

If the farmer's hands are slackened, even the ascetic state will fail.


Mu. Varadarajan

உழவருடைய கை, தொழில்‌ செய்யாமல்‌ மடங்கியிருக்குமானால்‌, விரும்புகின்ற எந்தப்‌ பற்றையும்‌ விட்டு விட்டோம்‌ என்று கூறும்‌ துறவிகளுக்கும்‌ வாழ்வு இல்லை.


Parimelalagar

உழவினார் கை மடங்கின் - உழுதலையுடையார் கை அதனைச் செய்யாது மடங்குமாயின்; விழைவதூஉம் விட்டேன் என்பார்க்கு நிலை இல்லை - யாவரும் விழையும் உணவும் யாம் துறந்தோம் என்பார்க்கு அவ்வறத்தின்கண் நிற்றலும் உளவாகா.
விளக்கம்:
(உம்மை, இறுதிக்கண்ணும் வந்து இயைந்தது. உணவின்மையால் தாம் உண்டலும் இல்லறஞ் செய்தலும் யாவர்க்கும் இல்லையாயின. அவர் உறுப்புமாத்திரமாய் கை வாளாவிருப்பின், உலகத்து இம்மை மறுமை வீடு என்னும் பயன்கள் நிகழா என்பதாம். 'ஒன்றனை மனத்தால் விழைதலும் ஒழிந்தோம் என்பார்க்கு' என உரைப்பாரும் உளர். இவை ஐந்து பாட்டானும் அதைச் செய்வாரது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) உழவை யுடையவர் அத்தொழிலைச் செய்யாது கைம்மடங்குவ ராயின், யாதொரு பொருளின்கண்ணும் விரும்புவதனையும் விட்டே மென்பார்க்கு அந்நிலையின்கண் நிற்றல் இல்லை,
(என்றவாறு). எனவே, துறவறத்தின்கண் நிற்பாரை நிறுத்துதல் உழவர்கண்ண தென்ற வாறு.