குறள் 1034

உழவு

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்

palakutai neelalum thangkutaikkeelk kaanpar
alakutai neela lavar


Shuddhananda Bharati

Farming

Who have the shade of cornful crest
Under their umbra umbrellas rest.


GU Pope

Agriculture

O'er many a land they 'll see their monarch reign,
Whose fields are shaded by the waving grain.

Patriotic farmers desire to bring all other states under the control of their own king.


Mu. Varadarajan

நெல்வளம்‌ உடைய தண்ணளி பொருந்திய உழவர்‌, பல அரசரின்‌ குடைநிழல்களையும்‌ தம்‌ குடையின்‌ கீழ்‌ காணவல்லவர்‌ ஆவர்‌.


Parimelalagar

அலகு உடை நீழலவர் - உழுதல் தொழிலான் நெல்லினையுடையராய தண்ணளியுடையோர்; பலகுடை நீழலும் தம் குடைக்கீழ்க் காண்பர் - பலவேந்தர் - குடை நிழலதாய மண் முழுதினையும் தம் வேந்தர்குடைக்கீழே காண்பர்.
விளக்கம்:
(அலகு - கதிர்; அஃது ஈண்டு ஆகு பெயராய் நெல்மேலதாயிற்று. 'உடைய' என்பது குறைந்து நின்றது. நீழல் போன்றலின், நீழல் எனப்பட்டது. 'நீழலவர்' என்றது இரப்போர்க்கெல்லாம் ஈதல் நோக்கி; ஒற்றுமை பற்றித் 'தங்குடை என்றார். 'குடைநீழல்' என்பதூஉம் ஆகுபெயர்; ''ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே'' [புறநா. 35] என்றதனால், தம் அரசனுக்குக் கொற்றம் பெருக்கி மண் முழுதும் அவனதாகக் கண்டிருப்பர் என்பதாம்; ''இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர்'' [சிலப். நாடுகாண். 149] என்றார் பிறரும்.)


Manakkudavar

(இதன் பொருள்) பல அரசர் குடைநிழலும் தம்மாசர் குடைநிழற்கீழே வரக்காண்பர், குடையில்லா நிழலை யுடையவர்,
(என்றவாறு). குடையில்லா நிழலாவது பைங்கூழ் நிழல். இது தாம் வாழ்தலே யன்றித் தம்மரசனையும் வாழ்விப்பரென்றது. (அலகுடைய நீழல் - கதிர்களையுடைய நெற்பயிரின் நிழல்.)