குறள் 1033

உழவு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்

uluthundu vaalvaarae vaalvaarmatr raellaam
tholuthundu pinsel pavar


Shuddhananda Bharati

Farming

They live who live to plough and eat
The rest behind them bow and eat.


GU Pope

Agriculture

Who ploughing eat their food, they truly live:
The rest to others bend subservient, eating what they give.

They alone live who live by agriculture; all others lead a cringing, dependent life.


Mu. Varadarajan

உழவு செய்து அதனால்‌ கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்‌; மற்றவர்‌ எல்லோரும்‌ பிறரைத்‌ தொழுது உண்டு பின்‌ செல்கின்றவரே.


Parimelalagar

உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் - யாவரும் உண்ணும் வகை உழுதலைச் செய்து அதனால் தாமும் உண்டு வாழ்கின்றாரே, தமக்குரியராய் வாழ்கின்றவர்; மற்றெல்லாம் தொழுது உண்டு பின் செல்பவர் - மற்றையாரெல்லாம் பிறரைத் தொழுது அதனால் தாம் உண்டு அவரைப் பின் செல்கின்றவர்.
விளக்கம்:
('மற்று' என்பது வழக்குப்பற்றி வந்தது. தாமும் மக்கட்பிறப்பினராய் வைத்துப் பிறரைத் தொழுது, அவர் சில கொடுப்பத் தம் உயிரோம்பி அவர் பின் செல்வார் தமக்குரியரல்லர் என்பது கருத்து.)


Manakkudavar

(இதன் பொருள்) உலகின்கண் வாழ்வாராவார் உழுதுண்டு வாழ்பவரே; மற்று வாழ்கின்றா ரெல்லோரும் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர். இது செல்வமாவது உழவினால் வருஞ் செல்வமென்றது.