குறள் 1031

உழவு

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

sulanrumyaerp pinnathu ulakam athanaal
ulandhthum ulavae thalai


Shuddhananda Bharati

Farming

Farming though hard is foremost trade
Men ply at will but ploughmen lead.


GU Pope

Agriculture

Howe'er they roam, the world must follow still the plougher's team;
Though toilsome, culture of the ground as noblest toil esteem.

Agriculture, though laborious, is the most excellent (form of labour); for people, though they goabout (in search of various employments), have at last to resort to the farmer.


Mu. Varadarajan

உலகம்‌ பல தொழில்‌ செய்து சுழன்றாலும்‌ ஏர்த்‌ தொழிலின்‌ பின்‌ நிற்கின்றது; அதனால்‌ எவ்வளவு துன்புற்றாலும்‌ உழவுத்‌ தொழிலே சிறந்தது.


Parimelalagar

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் - உழுதலான் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிறதொழில்களைச் செய்து திரிந்தும், முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம்; அதனால் உழந்தும் தலை உழவே - ஆதலான் எல்லா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே.
விளக்கம்:
(ஏர் - ஆகுபெயர். பிற தொழில்களால் பொருளெய்திய வழியும், உணவின் பொருட்டு உழுவார்கண் செல்ல வேண்டுதலின், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' என்றும், வருத்தமிலவேனும் பிற தொழில்கள் கடை என்பது போதர, 'உழந்தும் உழவே தலை' என்றும் கூறினார். இதனால் உழவினது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

உழவாவது உழவின் திறனும் அதனால் வரும் பயனும் கூறுதல். (இதன் பொருள்) உழவு ஒழிந்த எல்லா நெறிகளிலும் சுழன்று திரிந்தாலும், ஏருடையவர் வழியே வருவார் உலகத்தார் ; ஆதலான், வருந்தியும் உழுதலே தலைமையுடையது,
(என்றவாறு). இஃது உழவு வேண்டுமென்றது.