குறள் 1030

குடிசெயல்வகை

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி

idukkankaal konrida veelum aduththoonrum
nallaal ilaatha kuti


Shuddhananda Bharati

Promoting family welfare

A house will fall by a mishap
With no good man to prop it up.


GU Pope

The Way of Maintaining the Family

When trouble the foundation saps the house must fall,
If no strong hand be nigh to prop the tottering wall.

If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortune.


Mu. Varadarajan

துன்பம்‌ வந்தபோது உடனிருந்து தாங்கவல்ல நல்ல ஆள்‌ இல்லாத குடி, துன்பமாகிய கோடரி அடியில்‌ வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்‌.


Parimelalagar

இடுக்கண் கால் கொன்றிட வீழும் - துன்பமாகிய நவியம் புகுந்து தன் முதலை வெட்டிச் சாய்க்க ஒரு பற்றின்றி வீழா நிற்கும்; அடுத்து ஊன்றும் நல்லாள் இலாத குடி - அக்காலத்துப் பற்றாவன கொடுத்துத் தாங்க வல்ல நல்ல ஆண் மகன் பிறவாத குடியாகிய மரம்.
விளக்கம்:
(முதல் - அதன் வழிக்கு உரியர். வளர்ப்பாரைப் பெற்றுழி வளர்ந்து பயன்படுதலும் அல்லாவழிக் கெடுதலும் உடைமையின், மரமாக்கினார்; ''தூங்குசிறை வாவலுறை தொல்மரங்கள் அன்ன, ஓங்குகுலம் நைய அதனுட்பிறந்த வீரர், தாங்கல் கடன்'' [சீவக. காந்தருவ. 6] என்றார் பிறரும். இது குறிப்பு உருவகம். இதனான் அவர் இல்லாத குடிக்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்). இடும்பையாகிய நவியம் அடுத்துத் தனது வேரை வெட்டுத் லானே வீழும்; பக்கத்திலே அடுத்து ஊன்றுகின்ற முட்டுக்கோல் போலத் தாங்க வல்ல நல்ல ஆண்மக்கள் இல்லாத குடியாகிய மரம்,
(என்றவாறு). இது குடியோம்புவாரில்லாக்கால் அக்குடி கெடுமென்று கூறிற்று.