குறள் 1029

குடிசெயல்வகை

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு

idumpaikkae kolkalam kollo kudumpaththaik
kutrra maraippaan udampu


Shuddhananda Bharati

Promoting family welfare

Is not his frame a vase for woes
Who from mishaps shields his house?


GU Pope

The Way of Maintaining the Family

Is not his body vase that various sorrows fill,
Who would his household screen from every ill?

Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil ?1 O 3 O When trouble the foundation saps the house must fall,If no strong hand be nigh to prop the tottering wall.


Mu. Varadarajan

தன்‌ குடிக்கு வரக்கூடிய குற்றத்தை வராமல்‌ நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ?


Parimelalagar

குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு - மூவகைத் துன்பமும் உறற்பாலதாய தன் குடியை அவை உறாமற்காக்க முயல்வானது உடம்பு; இடும்பைக்கே கொள்கலங் கொல் - அம்முயற்சித் துன்பத்திற்கே கொள்கலமாம் அத்துணையோ? அஃது ஒழிந்து இன்பத்திற்கு ஆதல் இல்லையோ?
விளக்கம்:
(''உறைப்பெயல் ஒலைபோல, மறைக்குவன் பெரும நிற் குறித்து வருவேலே'' (புறநா. 290) என்புழியும் மறைத்தல் இப்பொருட்டாயிற்று. 'என் குடிமுழுதும் இன்புற்றுயரவே நான் இருமையும் எய்துதலான் இம்மெய் வருத்த மாத்திரம் எனக்கு நன்று' என்று முயலும் அறிவுடையான், அஃதொரு ஞான்றும் ஒழியாமைநோக்கி, 'இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ' என்றார். இது குறிப்பு மொழி. இவை இரண்டு பாட்டானும் அவர் அது செய்யும் இயல்பு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) சுற்றத்தார் மாட்டு உளதாகிய குறையை மறைக்கக் கருதுவான் உடம்பு, துன்பத்திற்குக் கொள்கலாம்,
(என்றவாறு)