குறள் 1028

குடிசெயல்வகை

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்

kutiseivaark killai paruvam matiseithu
maanang karuthak kedum


Shuddhananda Bharati

Promoting family welfare

No season have they who raise their race
Sloth and pride will honour efface.


GU Pope

The Way of Maintaining the Family

Wait for no season, when you would your house uprear;
'Twill perish, if you wait supine, or hold your honour dear.

As a family suffers by (one's) indolence and false dignity there is to be so season (good or bad) tothose who strive to raise their family.


Mu. Varadarajan

குடி உயர்வதற்கான செயல்‌ செய்கின்றவர்க்கு உரியகாலம்‌ என்று ஒன்று இல்லை. சோம்பல்‌ கொண்டு தம்‌ மானத்தைக்‌ கருதுவாரானால்‌ குடிப்பெருமை கெடும்‌.


Parimelalagar

மடி செய்து மானம் கருதக் கெடும் - தம் குடியினை உயரச் செய்வார் அச்செயலையே நோக்காது காலத்தை நோக்கி மடியினைச் செய்து கொண்டு மானத்தையும் கருதுவராயின் குடி கெடும்; குடி செய்வார்க்குப் பருவம் இல்லை. ஆகலான் அவர்க்குக் கால நியதி இல்லை.
விளக்கம்:
(காலத்தை நோக்கி மடி செய்தல் - வெயில் மழை பனி என்பன உடைமை நோக்கிப் 'பின்னர் செய்தும்' என்று ஒழிந்திருத்தல். மானம் கருதுதல் - 'இக்குடியிலுள்ளார் யாவரும் இன்பமுற இக்காலத்துத் துன்பமுறுவேன் யானோ?' என்று உட்கோடல். மேல் ''இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது'' (குறள். 481) என்றது உட்கொண்டு, 'இவர்க்கும் வேண்டுமோ?' என்று கருதினும் 'அது கருதற்க' என்று மறுத்தவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) குடியோம்புவார்க்குப் பருவம் இல்லை; தங் குடும்பத்தின் குறையை நினைத்து மடிசெய்து அதனை உயர்த்துவதனாலுள தாகும் குற்றத்தை நினைக்கக் குடிகெடும் ஆதலான்,
(என்றவாறு). இது குடிசெய்வார் இன்ப நுகர்ச்சியை விரும்பாரென்றது.