Kural 1027
குறள் 1027
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை
amarakaththu vankannar polath thamarakaththum
aatrruvaar maetrrae porai
Shuddhananda Bharati
Like dauntless heroes in battle field
The home-burden rests on the bold.
GU Pope
The Way of Maintaining the Family
The fearless hero bears the brunt amid the warrior throng;
Amid his kindred so the burthen rests upon the strong.
Like heroes in the battle-field, the burden (of protection etc.) is borne by those who are the most efficient in a family.
Mu. Varadarajan
போர்க்களத்தில் பலரிடையில் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப்போல், குடியில் பிறந்தவரிடையிலும் தாங்கவல்லவர்மேல்தான் பொறுப்பு உள்ளது.
Parimelalagar
அமரகத்து வன்கண்ணர் போல - களத்தின்கண் சென்றார் பலராயினும் போர்தாங்குதல் வன்கண்ணர்மேலதானாற் போல; தமரகத்தும் பொரை ஆற்றுவார் மேற்றே - குடியின் கண் பிறந்தார் பவராயினும் அதன் பாரம் பொறுத்தல் அது வல்லார் மேலதாம்.
விளக்கம்:
(பொருட்கு ஏற்க வேண்டும் சொற்கள் உவமைக்கண் வருவிக்கப்பட்டன. நன்கு மதிப்பிடுவார் அவரே என்பதாம். இவை மூன்று பாட்டானும் அது செய்வார் எய்துஞ் சிறப்புக் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) போர்க்களத்துச் செல்வார் பலருளராயினும் போர்தாங்கல் வன் கண்ணர்யாட்டே உள் தானாற்போல், ஒரு குடியிற் பிறந்தார் பலருளராயினும் குடி யோம்பல்வல்லவர்கண்ணதே குடியாகிய பாரத்தைப் பொறுத்தல்,
(என்றவாறு).