குறள் 1026

குடிசெயல்வகை

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்

nallaanmai yenpathu oruvatrkuth thaanpirandhtha
illaanmai aakkik kolal


Shuddhananda Bharati

Promoting family welfare

Who raise their race which gave them birth
Are deemed as men of manly worth.


GU Pope

The Way of Maintaining the Family

Of virtuous manliness the world accords the praise
To him who gives his powers, the house from which he sprang to raise.

A man's true manliness consists in making himself the head and benefactor of his family.


Mu. Varadarajan

ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான்‌ பிறந்த குடியை ஆளும்‌ சிறப்பைத்‌ தனக்கு உண்டாக்கிக்‌ கொள்வதாகும்‌.


Parimelalagar

ஒருவற்கு நல்லாண்மை என்பது - ஒருவனுக்கு நல்லாண்மை என்று உயர்த்துச் சொல்லப்படுவது; தான் பிறந்த குடியினையாளுந் தன்மையைத் தனக்குளதாக்கிக் கோடல்.
விளக்கம்:
(போர்த்தொழிலின் நீக்குதற்கு 'நல்லாண்மை' என விசேடித்தார். குடியினை யாளுந் தன்மை - குடியிலுள்ளாரை உயரச் செய்து தன் வழிப்படுத்தல். அதனைச் செய்துகோடல் நல்லாண்மையாமாறு வருகின்ற பாட்டால் பெறப்படும்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவனுக்கு மிக்க ஆண்மையென்று சொல்லப்படுவது, தான் பிறந்த குடியை ஆளுதலுடைமையை மனத்தின்கண் போக்கிக்கோடல்,
(என்றவாறு) ஆளுதலுடைமை - குடியோம்புதலை எப்பொழுதுஞ் சிந்தித்தல். எனவே, இது குடியோம்புதல் வேண்டுமென்றது