குறள் 1025

குடிசெயல்வகை

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு

kutrram ilanaaik kutiseithu vaalvaanaich
sutrramaach sutrrum ulaku


Shuddhananda Bharati

Promoting family welfare

Who keeps his house without a blame
People around, his kinship claim.


GU Pope

The Way of Maintaining the Family

With blameless life who seeks to build his race's fame,
The world shall circle him, and kindred claim.

People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul means.


Mu. Varadarajan

குற்றம்‌ இல்லாதவனாய்க்‌ குடி உயர்வதற்கான செயல்‌ செய்து வாழ்கின்றவனை உலகத்தார்‌ சுற்றமாக விரும்பிச்‌ சூழ்ந்து கொள்வர்‌.


Parimelalagar

குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானை - குற்றமாயின செய்யாது தன் குடியை உயரச் செய்தொழுகுவானை; சுற்றமாச் சுற்றும் உலகு - அவனுக்குச் சுற்றமாக வேண்டித் தாமே சென்று சூழ்வர் உலகத்தார்.
விளக்கம்:
(குற்றமாயின, அறநீதிகட்கு மறுதலையாய செயல்கள். தாமும் பயன் எய்தல் நோக்கி யாவரும் சென்று சார்வர் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) குற்றப்பட ஒழுகுத லிலனாய்த் தன்குடியை யோம்பி வாழு மவனை, உலகத்தாரெல்லாரும் தமக்குற்ற சுற்றமாக நினைத்துச் சூழ்ந்து வருவர்.