குறள் 1024

குடிசெயல்வகை

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு

koolaamal thaanae mutivaeithum thamkutiyaith
thaalaathu ugnyatrru pavarkku


Shuddhananda Bharati

Promoting family welfare

Who raise their races with ceaseless pain
No need for plan; their ends will gain.


GU Pope

The Way of Maintaining the Family

Who labours for his race with unremitting pain,
Without a thought spontaneously, his end will gain.

Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts willof themselves succeed.


Mu. Varadarajan

தம்‌ குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வார்க்கு அவர்‌ ஆராயாமலே அச்செயல்‌ தானே நிறைவேறும்‌.


Parimelalagar

தம் குடியைத் தாழாது உஞற்றுபவர்க்கு - தம் குடிக்காம் வினையை விரைந்து முயல்வார்க்கு; சூழாமல் தானே முடிவெய்தும் அவ்வினை முடிக்கும் திறம் அவர் சூழ வேண்டாமல், தானே முடிவெய்தும்.
விளக்கம்:
(குடி ஆகு பெயர். தெய்வம் முந்துறு தலான் பயன் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதற்குத் தெய்வம் துணையாதல் கூறப்பட்டது.


Manakkudavar

(இதன் பொருள்) தங்குடியைத் தாழச் செய்யாதே உயரச் செய்யக் கருதுவார்க்கு அவ்வுயர்ச்சி எண்ணாமல் தானே முடிவு பெறும், (எ - று. கருதினவளவிலே அவரது நல்வினை தானே முடிக்கும்; இவர் தம்கண் அதனை மேற்கோடலே வேண்டுவ தென்றவாறு.