குறள் 1023

குடிசெயல்வகை

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்

kutiseival yennum oruvatrkuth thaeivam
matithatrruth thaanmundh thurum


Shuddhananda Bharati

Promoting family welfare

When one resolves to raise his race
Loin girt up God leads his ways.


GU Pope

The Way of Maintaining the Family

'T'll make my race renowned,’ if man shall say,
With vest succinct the goddess leads the way.

The Deity will clothe itself and appear before him who resolves on raising his family.


Mu. Varadarajan

என்‌ குடியை உயரச்செய்வேன்‌ என்று முயலும்‌ ஒருவனுக்கு ஊழ்‌, ஆடையை இறுகக்‌ கட்டிக்‌ கொண்டு தானே முன்வந்து துணை செய்யும்‌.


Parimelalagar

குடி செய்வல் என்னும் ஒருவற்கு - 'என் குடியினை உயரச் செய்யக் கடவேன்' என்று கொண்டு, அதற்கு ஏற்ற கருமங்களின் முயலும் ஒருவனுக்கு; தெய்வம் மடி தற்று தான் முந்துறும் - தெய்வம் ஆடையைத் தற்றுக் கொண்டு தான் முந்துற்று நிற்கும்.
விளக்கம்:
(முயற்சியை அதன் காரணத்தால் கூறினார். தற்றுதல் - இறுக உடுத்தல். முன் நடப்பார் செயல் நியதிமேல் ஏற்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) குடியோம்புவார்க்குப் பருவம் இல்லை; தங் குடும்பத்தின் குறையை நினைத்து மடிசெய்து அதனை உயர்த்துவதனாலுள தாகும் குற்றத்தை நினைக்கக் குடிகெடும் ஆதலான்,
(என்றவாறு). இது குடிசெய்வார் இன்ப நுகர்ச்சியை விரும்பாரென்றது.