குறள் 1022

குடிசெயல்வகை

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி

aalvinaiyum aanra arivum yenairantin
neelvinaiyaal neelum kuti


Shuddhananda Bharati

Promoting family welfare

These two exalt a noble home
Ardent effort and ripe wisdom.


GU Pope

The Way of Maintaining the Family

The manly act and knowledge full, when these combine
In deed prolonged, then lengthens out the race's line.

One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances.


Mu. Varadarajan

முயற்சி, நிறைந்த அறிவு என்று சொல்லப்படும்‌ இரண்டினையும்‌ உடைய இடைவிடாத செயலால்‌ ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்‌.


Parimelalagar

ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையான் முயற்சியும் நிறைந்த அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினையுமுடைய இடையறாத கருமச்செயலால், குடி நீளும் - ஒருவன் குடி உயரும்.
விளக்கம்:
(நிறைதல் - இயற்கையறிவு செயற்கையறிவோடு கூடி நிரம்புதல். ஆள்வினை, மடிபுகுதாமற் பொருட்டு. ஆன்ற அறிவு, உயர்தற்கு ஏற்ற செயல்களும் அவை முடிக்குந் திறமும் பிழையாமல் எண்ணுதற்பொருட்டு இவை இரண்டு பாட்டானும் அச்செயற்குக் காரணம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இ-ள்.) முயற்சியும் நிரம்பின் அறிவும் என்று சொல்லப்பட்ட இரண்டினா லும் வளருகின்ற வினையினாலே குடி உயரும், (எ – று)