Kural 1019
குறள் 1019
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை
kulanjsudum kolkai pilaippin nalanjsudum
naaninmai ninrak katai
Shuddhananda Bharati
Lapse in manners injures the race
Want of shame harms every good grace.
GU Pope
'Twill race consume if right observance fail;
'Twill every good consume if shamelessness prevail.
Want of manners injures one's family; but want of modesty injures one’s character.
Mu. Varadarajan
ஒருவன் கொள்கை தவறினால், அத் தவறு அவனுடைய குடிப்பிறப்பைக் கெடுக்கும். நாணில்லாத தன்மை நிலை பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.
Parimelalagar
கொள்கை பிழைப்பின் குலம் சுடும் - ஒருவனுக்கு ஒழுக்கம் பிழைக்குமாயின் அப்பிழைப்பு அவன் குடிப்பிறப்பொன்றனையும் - கெடுக்கும்; நாணின்மை நின்றக்கடை நலம் சுடும் - ஒருவான் மாட்டு நாணின்மை நின்றவழி அந்நிலை அவன் நலம் யாவற்றையும் கெடுக்கும்.
விளக்கம்:
(நிற்றல் - ஒரு பொழுதும் நீங்காமை. நலம் சாதியொருமை யாதலின், பிறப்பு, கல்வி, குணம், செயல், இனம் என்றிவற்றான் வந்தனவெல்லாம் கொள்ளப்படும். ஒழுக்க அழிவினும் நாண் அழிவு இறப்பத் தீது என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) ஒழுக்கம் தப்புமாயின், அத் தப்புதல் குலத்தினைச் சுடும்; அது போல, நாணின்மை நிற்குமாயின், தமது நலத்தினைச் சுடும்,
(என்றவாறு). இது நலமில்லையா மென்றது.