குறள் 1018

நாணுடைமை

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து

pirarnaanath thakkathu thaannaanaa naayin
aramnaanath thakkathu utaiththu


Shuddhananda Bharati

Sensitiveness to shame

Virtue is much ashamed of him
Who shameless does what others shame.


GU Pope

Shame

Though know'st no shame, while all around asha med must be:
Virtue will shrink away ashamed of thee!

Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.


Mu. Varadarajan

ஒருவன்‌ மற்றவர்‌ நாணத்தக்க பழிக்குக்‌ காரணமாக இருந்தும்‌ தான்‌ நாணாமலிருப்பானானால்‌, அறம்‌ நாணி அவனைக்‌ கைவிடும்‌ தன்மையுடையதாகும்‌.


Parimelalagar

பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின் - கேட்டாரும் கண்டாரும் நாணத்தக்க பழியை ஒருவன் தான் நாணாது செய்யுமாயின்; அறம் நாணத்தக்கது உடைத்து - அந்நாணாமை அவனை அறம்விட்டு நீங்கத் தக்க குற்றத்தினையுடையத்து
விளக்கம்:
('தான்' எனச் செய்வானைப் பிரிக்கின்றார் ஆகலின்; 'பிறர்' என்றார். நாணோடு இயைபு இல்லாதானை அறம் சாராது என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றினைத் தான் நாணாது செய் வனாயின், அவனை அறம் நானியடையா தொழியும் தகுதியுடைத்தாம்,
(என்றவாறு). இது நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது.