குறள் 1017

நாணுடைமை

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்

naanaal uyiraith thurappar uyirpporuttaal
naanthuravaar naanaal pavar


Shuddhananda Bharati

Sensitiveness to shame

For shame their life the shame-sensed give
Loss of shame they won't outlive.


GU Pope

Shame

The men of modest soul for shame would life an offering make,
But ne'er abandon virtuous shame for life's dear sake.

The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.


Mu. Varadarajan

நாணத்தைத்‌ தமக்குரிய பண்பாகக்‌ கொள்பவர்‌, நாணத்தால்‌ உயிரை விடுவார்‌; உயிரைக்‌ காக்கும்‌ பொருட்டாக நாணத்தை விடமாட்டார்‌.


Parimelalagar

நாண் ஆள்பவர் - நாணினது சிறப்பு அறிந்து அதனை விடாதொழுகுவார்; நாணல் உயிரைத் துறப்பார் - அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி நான் சிதையாமைப் பொருட்டு உயிரை நீப்பார்; உயிர்ப்பொருட்டு நாண் துறவார் - உயிர் சிதையாமைப் பொருட்டு நாணினை நீக்கார்.
விளக்கம்:
(உயிரினும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவற் செயல்கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நாணுடைமைப் பொருட்டாக உயிரைத் துறப்பார்; உயிர்ப்பொருட் டாக நாணைத்துறவார், நாணம் வேண்டுபவர்,
(என்றவாறு). இது நாண் உயிரினும் சிறந்ததென்றது.