குறள் 1016

நாணுடைமை

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்

naanvaeli kollaathu manno viyangnyaalam
paenalar maelaa yavar


Shuddhananda Bharati

Sensitiveness to shame

The great refuse the wonder-world
Without modesty's hedge and shield.


GU Pope

Shame

Unless the hedge of shame inviolate remain,
For men of lofty soul the earth's vast realms no charms retain.

The great make modesty their barrier (of defence) and not the wide world.


Mu. Varadarajan

நாணமாகிய வேலியைத்‌ தமக்குக்‌ காவலாகச்‌ செய்து கொள்ளாமல்‌, மேலோர்‌ பரந்த உலகில்‌ வாழும்‌ வாழ்க்கையை விரும்பி மேற்கொள்ளமாட்டார்‌.


Parimelalagar

மேலாயவர் - உயர்ந்தவர்; வேலி நாண் கொள்ளாது - தமக்கு ஏமமாக நாணினைக் கொள்வதன்றி; வியன் ஞாலம் பேணலர் - அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார்.
விளக்கம்:
(பழி பாவங்கள் புகுநாமற் காத்தலின், 'வேலி' என்றார். நாணும் ஞாலமும் தம்முள் மாறாயவழி அந்நாணினைக் கொள்வதல்லது, அவை புகுந்து நெறியாய ஞாலத்தினைக் கொள்ள விரும்பார் என்பதாம். மன்னும் ஓவும் அசைகள். 'நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம் பெற விரும்பார்' என்று உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) உயர்ந்தவர் த மக்கு ஏம மாக நாணினைக் கொள்வதன்றி அகன்ற ஞாலத்தைக் கொள்ள விரும்பார்,
(என்றவாறு).