குறள் 1015

நாணுடைமை

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு

pirarpaliyum thampaliyum naanuvaar naanukku
uraipathi yennum ulaku


Shuddhananda Bharati

Sensitiveness to shame

In them resides the sense of shame
Who blush for their and other's blame.


GU Pope

Shame

As home of virtuous shame by all the world the men are known,
Who feel ashamed for others, guilt as for their own.

The world regards as the abode of modesty him who fear his own and other's guilt.


Mu. Varadarajan

பிறர்க்கு வரும்‌ பழிக்காகவும்‌ தமக்கு வரும்‌ பழிக்காவும்‌ நாணுகின்றவர்‌, நாணத்திற்கு உறைவிடமானவர்‌ என்று உலகம்‌ சொல்லும்‌.


Parimelalagar

பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் - பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியையும் ஒப்ப மதித்து நாணுவாரை; உலகு நாணுக்கு உறைபதி என்னும் - உலகத்தார் நாணுக்கு உறைவிடம் என்று சொல்லுவர்.
விளக்கம்:
(ஒப்ப மதித்தல் - அதுவும் தமக்கு வந்ததாகவே கருதுதல், அக்கருத்துடையர் பெரியராகலின் அவரை உயர்ந்தோர் யாவரும் புகழ்வர் என்பதாம். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறர்க்கு வரும் பழியையும் தமக்கு வரும் பழியைப் போல அஞ்சி நாணுமவர்களை நாணுக்கு இருப்பிடமென்று சொல்லுவர் உலகத்தார்,
(என்றவாறு). இது தம்பதிக்கு அஞ்சி நாணுதலேயன்றிப் பிறர்பழிக்கும் அஞ்சி நாண வேண்டுமென்றது. இவர் இங்கு "நாணாகிய வேலியைப் பெற்றல்லது ஞாலம்பெற விரும்பார் என்றுரைப்பாரு முளர்'' என்றெழுதியிருப்பது மணக்குடவருரையாக விருக்கலாம் போலும்.