குறள் 1014

நாணுடைமை

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை

anianno naanutaimai saannorkku akhthinrael
pinianno peedu natai


Shuddhananda Bharati

Sensitiveness to shame

Shame is the jewel of dignity
Shameless swagger is vanity.


GU Pope

Shame

And is not shame an ornament to men of dignity?
Without it step of stately pride is piteous thing to see.

Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others).


Mu. Varadarajan

சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம்‌ அன்றோ? அந்த அணிகலம்‌ இல்லையானால்‌, பெருமிதமாக நடக்கும்‌ நடை ஒரு நோய்‌ அன்றோ?


Parimelalagar

சான்றோர்க்கு நாண்உடைமை அணியன்றோ - சான்றோர்க்கு நாண் உடைமை ஆபரணமாம்; அஃது இன்றேல் பீடுநடை பிணி அன்றோ - அவ்வாபரணம் இல்லையாயின் அவர் பெருமிதத்தையுடைய நடை கண்டார்க்குப் பிணியாம்.
விளக்கம்:
(அழகு செய்தலின் 'அணி' என்றும், பொறுத்தற்கு அருமையின் 'பிணி' என்றும், கூறினார். ஓகார இடைச் சொற்கள் எதிர்மறைக்கண் வந்தன. இவை மூன்று பாட்டானும் அதன் சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) சான்றோர்க்கு நாணுடைமையாவது அழகன்றோ ? அஃதில்லை யாயின், பெரிய நடை நோயன்றோ ?
(என்றவாறு). இது சான்றோர்க்கழகாவது நாணுடைமை யென்றது.