Kural 784
குறள் 784
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு
nakuthatr porutdanru natdal mikuthikkan
maetrsenaru itiththatr porutdu
Shuddhananda Bharati
Not to laugh is friendship made
But to hit when faults exceed.
GU Pope
Nor for laughter only friendship all the pleasant day,
But for strokes of sharp reproving, when from right you stray.
Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand ingiving one another sharp rebukes in case of transgression.
Mu. Varadarajan
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.
Parimelalagar
நட்டல் நகுதற் பொருட்டன்று= ஒருவனோடு ஒருவன் நட்புச்செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடல் பொருட்டன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு= அவர்க்கு வேண்டாதன செய்கை உளதாயவழி முற்பட்டுக் கழறுதற் பொருட்டு.
விளக்கம்:
பழியும் பாவமும் தரும் செய்கை துன்பமே பயத்தலான், வேண்டப்படுவது அன்மையின், அதனை 'மிகுதி' என்றும், அது செய்தற்கு முன்னே மீட்டல் வேண்டுதலின் 'மேற்சென்று' என்றும். இன்சொற்கு மீளாமையின் 'இடித்தற்பொருட்டு' என்றும் கூறினார். :இதனால் நட்பின் பயன் கூறப்பட்டது.
Manakkudavar
(இதன் பொருள்) ஒருவனோடு ஒருவன் நட்புப்பண்ணுதல் நகுதற் பொருட்டன்று; மிகையாயின செய்யுமிடத்து முற்பட்டுக் கழறுதற் பொருட்டு,
(என்றவாறு). இது மனமகிழ நட்புக்கோடலன்றித் தீக்கருமங்கண்டால் கழ்றவும் வேண்டும் மென்றது, .