குறள் 733

நாடு

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு

poraiyorungku maelvarungkaal thaangki iraivatrku
iraiyorungku naervathu naadu


Shuddhananda Bharati

The country

It's land that bears pressing burdens
And pays its tax which king demands.


GU Pope

The Land

When burthens press, it bears; Yet, With unfailing hand
To king due tribute pays: that is the 'land'

A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms)and (yet) pay the full tribute to its sovereign.


Mu. Varadarajan

(மற்ற நாட்டு மக்கள்‌ குடியேறுவதால்‌) சுமை ஒரு சேரத்‌ தன்மேல்‌ வரும்போது தாங்கி, அரசனுக்கு இறைப்பொருள்‌ முழுவதும்‌ தரவல்லது நாடாகும்‌.


Parimelalagar

பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள் பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால் அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு - அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும் உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது.
விளக்கம்:
(பாரங்கள் - மக்கள் தொகுதியும் ஆன் எருமை முதலிய விலங்குத் தொகுதியும். தாங்குதல் - அவை தத்தம் தேயத்துப் பகை வந்து இறுத்ததாக, அரசு கோல் கோடியதாக, உணவின்மையானாகத் தன்கண் வந்தால் அவ்வத்தேயங்களைப் போல இனிதிருப்பச் செய்தல். அச்செயலால் இறையைக் குறைப்படுத்தாது தானே கொடுப்பதென்பார், 'இறை ஒருங்கு நேர்வது' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) குடிமை செய்தால், ஒரு காலத்திலே பல குற்றம் தன்னிடத்து வரினும் அதனைப் பொறுத்து, நிச்சயித்த கடமையை அரசனுக்கு ஒருங்கு கொடுக்கவல்லது நாடு, (எ - று ) குடிமையாவது கடமையொழிய வருவது.