குறள் 588

ஒற்றாடல்

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்

otrrotrrith thandhtha porulaiyum matrrumor
otrrinaal otrrik kolal


Shuddhananda Bharati

Espionage

The reports given by one spy
By another spy verify.


GU Pope

Detectives

Spying by spies, the things they tell
To test by other spies is well.

Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.


Mu. Varadarajan

ஓர்‌ ஒற்றன்‌ மறைந்து கேட்டுத்‌ தெரிவித்த செய்தியையும்‌ மற்றோர்‌ ஒற்றனால்‌ கேட்டுவரச்‌ செய்து ஒப்புமை கண்டபின்‌ உண்மை என்று கொள்ள வேண்டும்‌.


Parimelalagar

ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஓரொற்றன் ஒற்றிவந்து அறிவித்த காரியத்தன்னையும்; மற்றும் ஓர் ஒற்றனால் ஒற்றிக் கொளல் - பிறனோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க.
விளக்கம்:
(ஒற்றப்பட்டாரோடு ஒத்து நின்று மாறுபடக் கூறலும் கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒற்றர் மாற்றரசர்மாட்டும் பொருள் பெற்று மாறுபடச் சொல்லு தல் கூடுமாதலால், ஓரொற்று அறிந்து சொன்ன பொருளைப் பின்னையும் ஓரொற்றினாலே ஒற்றியறிந்து பின்பு அதனுண்மை கொள்க,
(என்றவாறு).