குறள் 489

காலமறிதல்

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்

yeithatr kariyathu iyaindhthakkaal andhnilaiyae
seithatr kariya seyal


Shuddhananda Bharati

Knowing proper time

When comes the season ripe and rare
Dare and do hard things then and there.


GU Pope

Knowing the fitting Time

When hardest gain of opportunity at last is won,
With promptitude let hardest deed be done.

If arare opportunity occurs, while it lasts, let aman do that which is rarely to be accomplished (butfor such an opportunity).


Mu. Varadarajan

கிடைத்தற்கரிய காலம்‌ வந்து வாய்க்குமானால்‌, அந்த வாய்ப்பைப்‌ பயன்படுத்திக்கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச்‌ செய்யவேண்டும்‌.


Parimelalagar

எய்தற்கு அரியது இயைந்தக்கால் - பகையை வெல்லக் கருதும் அரசர், தம்மால் எய்துதற்கு அரிய காலம் வந்து கூடியக்கால்; அந்நிலையே செய்தற்கு அரிய செயல் - அது கழிவதற்கு முன்பே அது கூடாவழித் தம்மாற் செய்தற்கு அரிய வினைகளைச் செய்க.
விளக்கம்:
[ஆற்றல் முதலியவற்றால் செய்து கொள்ளப்படாமையின் 'எய்தற்கு அரியது' என்றும், அது தானே வந்து இயைதல் அரிதாகலின், 'இயைந்தக்கால்' என்றும், இயைந்தவழிப் பின் நில்லாது ஓடுதலின், 'அந்நிலையே' என்றும், அது பெறாவழிச் செய்யப்படாமையின் 'செய்தற்கு அரிய' என்றும் கூறினார். இதனால் காலம் வந்துழி விரைந்து செய்க என்பது கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) பெறுதற்கு அரிய காலம் வந்தால், அப்பொழுதே தன்னாற் செய் தற்கு அரியவாகிய வினைகளைச் செய்து முடிக்க,
(என்றவாறு). இது காலம் வந்தால் அரிதென்று காணாமற் செய்யவேண்டுமென்றது.