குறள் 487

காலமறிதல்

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

pollaena aangkae puramvaeraar kaalampaarththu
ulvaerppar olli yavar


Shuddhananda Bharati

Knowing proper time

The wise jut not their vital fire
They watch their time with hidden ire.


GU Pope

Knowing the fitting Time

The glorious once of wrath enkindled make no outward show,
At once; they bide their time, while hidden fires within them glow.

The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, andrestrain it within.


Mu. Varadarajan

அறிவுடையவர்‌, (பகைவர்‌ தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில்‌ சினம்‌ கொள்ளமாட்டார்‌;(வெல்வதற்கு ஏற்ற காலம்‌ பார்த்து அகத்தில்‌ சினம்‌ கொள்வர்‌.


Parimelalagar

ஒள்ளியவர் - அறிவுடைய அரசர்; ஆங்கே பொள்ளெனப் புறம் வேரார் - பகைவர் மிகை செய்த பொழுதே விரைவாக அவரறியப் புறத்து வெகுளார்; காலம் பார்த்து உள் வேர்ப்பர் - தாம் அவரை வெல்லுதற்கு ஏற்ற காலத்தினை அறிந்து அது வரும் துணையும் உள்ளே வெகுள்வர்.
விளக்கம்:
['பொள்ளென' என்பது குறிப்பு மொழி. 'வேரார்', 'வேர்ப்பர்' எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார்; அறிய வெகுண்டுழித் தம்மைக் காப்பாராகலின், 'புறம் வேரார்' என்றும், வெகுளி ஒழிந்துழிப் பின்னும் மிகை செய்யாமல் அடக்குதல் கூடாமையின் 'உள் வேர்ப்பர்' என்றும் கூறினார்.]


Manakkudavar

(இதன் பொருள்) கதுமென அவ்விடத்தே யுடம்புவேரார் ; தமக்குச் செய்யலாம் காலம் வரவு பார்த்து மனமொப்பர் ஒள்ளியர்,
(என்றவாறு). ஒப்புப் பொறாமையால் வருவதொன்று. இது பகைவர் பொறாதவற்றைச் செய்தாலும் காலம் பார்க்கவேண்டுமென்றது.