குறள் 443

பெரியாரைத் துணைக்கோடல்

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

ariyavatrru laellaam arithae paeriyaaraip
paenith thamaraak kolal


Shuddhananda Bharati

Gaining great men's help

Honour and have the great your own
Is rarest of the rare things known.


GU Pope

Seeking the Aid of Great Men

To cherish men of mighty soul, and make them all their own,
Of kingly treasures rare, as rarest gift is known.

To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.


Mu. Varadarajan

பெரியாரைப்‌ போற்றித்‌ தமக்குச்‌ சுற்றத்தாராக்கிக்‌ கொள்ளுதல்‌ பெறத்தக்க அரிய பேறுகள்‌ எல்லாவற்றிலும்‌ அருமையானதாகும்‌.


Parimelalagar

பெரியாரைப் பேணித் தமராக் கொளர் - அப்பெரியவர்களை அவர் உவர்ப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்; அறியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது.
விளக்கம்:
(உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது, இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.)


Manakkudavar

(இதன் பொருள்) செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே, தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்,
(என்றவாறு). பெரியாரைக் கொள் லென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை.